பொதுமக்கள் மனநிலை என்ன வேட்பாளர்கள் விபரம் சேகரிப்பு
கம்பம்:பொதுமக்களின் மனநிலை என்ன என்பதை கணித்து கூற கட்சி நிர்வாகிகளை வேட்பாளர்கள் கேட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். அ.தி.மு.க., வேட்பாளர் அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள் பற்றியும், வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்பது பற்றி கூறுகிறார் . த.வெ.க., வேட்பாளர் விஜயை மையப்படுத்தி பிரசாரம் செய்கின்றனர். நா. த.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என வாக்குறுதிகளை கூறி ஆதரவு திரட்டுகிறார்.
இதில் தி.மு.க., வேட்பாளர் மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம் பற்றி பிரசாரம் செய்கின்றனர்.
ஆனால் கிராம பகுதிகளில் ஆளும் கட்சியினர் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் கிராமங்களில் பிரசாரத்தின் போது பெண்கள் ஏடாகூடமாக கேள்வி கேட்டு வேட்பாளரை 'டென்ஷன்' ஆக்குகின்றனர். சின்னமனூர் அருகே உள்ள அழகாபுரியில் ஆளும் கட்சி வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது.
எனவே வேட்பாளர்கள் உஷாராகி பிரசாரத்திற்கு முதல் நாளே, சம்பந்தப்பட்ட கட்சி கிளை நிர்வாகிகளிடம் , மக்களின் மன நிலை பற்றி கேட்கின்றனர். அத்தோடு பிரசாரத்தின் போது ஆதரவு பெண்களை முன்வரிசையில் நிறுத்த கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த சிக்கல் பெரும்பாலும் எல்லா வேட்பாளர்களுக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் ஏற்படுகிறது. ஆனாலும் எல்லா வேட்பாளர்களும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
மேலும்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா
-
அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் பேச்சு