பிரதான குழாயில் உடைப்பு: அய்யன்பேட்டையில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியம், அய்யன்பேட்டையில் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், அய்யன்பேட்டை வடக்கு தெருவில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறுபாலம் அருகில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது.

இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement