சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி எண் வழங்க அலுவலர்கள் தீவிரம்  

விழுப்புரம்: சட்டசபை பொதுத்தேர்தலை யொட்டி, கிராமங்களில் அரசியல் கட்சிகள் வீட்டு சுவர்களில் தீட்டிய விளம்பரங்களுக்கு அனுமதி எண் வழங்கும் பணிகளில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.

சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள், சின்னங்களை விளம்பரம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் அரசியல் கட்சியினர் அனுமதி கேட்டு பெற்று, தங்களின் வேட்பாளர், சின்னத்தை விளம்பரம் செய்துள்ளனர்.

இதையொட்டி, வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்விற்கு சென்று, வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு, அனுமதியிருந்தால் அந்த சுவர் விளம்பங்களில் அனுமதிக்கான எண்ணை பதிவு செய்கின்றனர். வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி செய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களை அழிக்கவும், அலுவலர்கள் ஆயத்தமாகி, நகரம் மற்றும் கிராமங்களில் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

Advertisement