கருணாநிதி வழியில் ஏழை குடும்பங்களில் பொருளாதார நிலையை கல்வி மூலம் உயர்த்தும் ஸ்டாலின் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்

செஞ்சி: குடும்பங்களின் பொருளாதார நிலையை கருணாநிதி வழியில் கல்வியின் மூலம் ஸ்டாலின் உயர்த்தி வருகிறார் என மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார்.

செஞ்சி ஒன்றியம் அப்பம்பட்டு, கோனை, வடகால், சென்னாலூர், தின்னலூர் உள்ளிட்ட கிராமங்களில் செஞ்சி தொகுதி மஸ்தான் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது.

ஏழை குடும்பங்களின் வறுமையை ஒழிக்க ஒரே வழி கல்விதான் என்பதை கருணாநிதி உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம், புதுமைபெண்,தமிழ்புதல்வன், நான்முதல்வன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வரை படிப்பிற்காக பல திட்டங்களை தந்துள்ளார்.

கருணாநிதி, ஸ்டாலின் வழியில் வந்த நானும் இதுவரையில் கல்விக்காக உதவி கேட்டு வந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறேன் எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். காங்., மாவட்ட தலைவர் ரங்கபூபதி முன்னிலை வகித்தார்.

பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, காங்., சக்திவேல், சம்பத், தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் தயாநிதி, வி.சி., மாவட்ட செயலாளர் சிவா, துணை சேர்மன் ஜெயபால், மகளீர் அணி தாட்சாயணி கார்த்திகேயன், ம.நே.ம.கட்சி செயற்குழு உறுப்பினர் சையத் உஸ்மான் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement