தேர்தல் ஆணைய செயல்பாடு சரியில்லை: பழைய அனுபவத்தில் கார்த்தி எம்.பி., சர்டிபிகேட்
திருப்புத்துார்:முந்தைய தேர்தல் அனுபவங்களின் படி தேர்தல் ஆணையத்திற்கு பிரமாதமான சர்டிபிகேட் வழங்க முடியாது என சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
திருப்புத்துாரில் அவர் கூறியதாவது:
சாத்தான்குளம் சம்பவத்திற்கான கோர்ட் தீர்ப்பு போலீசாரின் கொடூர மனப்பான்மையிலிருந்து விடுபடவும், மக்களுக்கு அரணாக, நண்பனாக இருக்கவும் உணர்த்துகிறது. போலீஸ் லாக் அப் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறேன். போலீசார் அனைவரும் காலம்,காலமாக இருக்கும் இந்த மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும்.
த.வெ.க.வில் தலைமைக்கு கட்டுப்படுதல் என்பதே கிடையாது.விஜய் பெயரில் யார் வேட்புமனுத்தாக்கல் செய்தது என்பதும், அதில் என்ன திட்டம் உள்ளது என்பதெல்லாம் தெரியவில்லை. விஜய்யின் பிரசார நேரத்தை குறைக்க மாநில அரசால் முடியாது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அரசின் நிர்வாகக் கட்டுப்பாடு தேர்தல் ஆணையத்திற்கு வந்து விடும். பிரசார அனுமதியை நிர்ணயிப்பது தேர்தல் ஆணையம் தான்.
மனுக்கள் தானே வாங்கியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இனிமேல் தான் போக, போகத்தான் தெரியும். கடந்த தேர்தல் அனுபவத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பிரமாதமான சர்டிபிகேட் என்னால் வழங்க முடியாது.
எப்.சி.ஆர்.ஏ., சட்டத் திருத்தம் எந்த ஒரு பல்கலை, நிறுவனம், அமைப்பு, சர்வதேச அமைப்பாக இருந்தாலும் அதற்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்தால் முடக்க வேண்டும். இது சட்டத்தையே ஆயுதமாக்கும் வழிமுறையாகும்.
இந்த அரசாங்கத்திற்கு எதிராக கருத்து சொன்னால் அவர்களை முடக்கி, செயலிழக்க வைக்க குரலை நெரிக்க இந்த திருத்தங்களை கொண்டு வருகிறார்கள். சட்டம் கொண்டு வரவில்லை. லோக்சபாவில் கொண்டு வரும்போது நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். இருக்கும் சட்ட விதிகளே போதுமானது. என்றார்.
மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை