தனித்தொகுதி வேட்பாளர் விவகாரம்: தேர்தல் கமிஷன் பதில் அளிக்க உத்தரவு
சென்னை : தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 44 தனி தொகுதிகள் உள்ளன. தனி தொகுதிகளில், ஹிந்து, சீக்கியம், பவுத்தம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை பின்பற்றும் பட்டியலினத்தவரையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என, ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, அர்ஜுன் சம்பத் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் ஆஜராகி, ''ஹிந்து, சீக்கியம், பவுத்தம் மதத்தை பின்பற்றுபவர்களையே, பட்டியல் இனத்தவர் என, அரசியல் சாசனம் தெரிவித்தது. இதையே, உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது,'' என்றார்.
அப்போது நீதிபதிகள், 'ஒரு வேட்பாளர் மீண்டும் மதம் மாறி இருக்கக்கூடும் என்ற சூழலில், வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள ஜாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை, தேர்தல் அதிகாரி எவ்வாறு சரிபார்க்க இயலும்' என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, ''பட்டியல் இனத்தவர் என்ற சான்று உண்மையானதா, போலியானதா என்பதை மட்டுமே ஆய்வு செய்ய, தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அந்த சான்று சரியாக இல்லாவிட்டால் மட்டுமே வேட்பு மனு நிராகரிக்கப்படும்,'' என்றார். அதற்கான சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, மனுவுக்கு தேர்தல் கமிஷன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
பட்டியல் இனத்தவரை சாதி அடிப்படையில்தானே வரையறுக்க வேண்டும்? மதத்தை வைத்து சாதியை தீர்மானிக்க, நீதிபதிகளுக்கு மதக்கோட்பாடுகளைப் பற்றிய அறிவும் பயிற்சியும் அனுபவமும் இல்லையே? They are incompetent in religious awareness. சபரிமலை ஐயப்பன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு இதைத்தானே தெரிவித்திருக்கிறது?
அரசு வேலைக்கும் இட ஒதுக்கீடு பெறுவதற்கும் சாதி சான்றிதழ் பயன்படுத்திவிட்டு பின்னர் வேலை கிடைத்ததும் தண்ணியை மட்டும் தெளித்துக் கொண்டு மதம் மாறுகிறார்கள்.. தன் பிள்ளைக்கும் சிறுபான்மை பெயரை வைத்துக்கொண்டு வெளியில் அவர்களைப் போல உலவ விடுவார்கள்.. ஆனால் சாதி சான்றிதழ் மட்டும் பட்டியலாக இருக்கும்.. அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் கணம் கோர்ட்டார் அவர்களே..
பட்டியல் இனத்தவர் ஆப்ரஹாமிய மதங்களுக்கு மாறும்போதே ஆட்டோமேட்டிக் ஆக சாதிசான்றிதழ் காலாவதி ஆகி விடுகிறது.. அதன்பிறகு அந்த பட்டியல்சாதி சான்றிதழை பயன்படுத்துவதே மோசடி... தண்டனைக்கு உரியது... அப்புறம் அதற்கு ஏது உண்மைத்தன்மை?..
பதில் அறிக்கையை எப்படியும் மே மாதம் 31 ம் தேதி 2031 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடுமையாக உத்தரவிடுங்கள் யுவர் ஆனர்