இறுதி வேட்பாளர் பட்டியல்
சிவகங்கை:சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
சிவகங்கை தொகுதியில் 31 பேர் மனு தாக்கல் செய்ததில், பரிசீலனைக்கு பின் 23 மனு ஏற்கப்பட்டு, 4 மனு தள்ளுபடியாகி 19 பேர் உள்ளனர். காரைக்குடியில் 32 பேர்களில் 4 மனு தள்ளுபடி செய்த நிலையில் 28 பேரும், திருப்புத்துாரில் 27 பேர்களில் 3 மனு தள்ளுபடி செய்ததில் 24 பேர்களும், மானாமதுரையில் (தனி) 23 பேர்களில் 7 மனு தள்ளுபடி செய்ததில், 16 பேர் என ஒட்டு மொத்தமாக நான்கு தொகுதிகளில் 105 மனுக்களில் 18 தள்ளுபடி போக 87 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என்றால் பெறலாம். மதியம் 3:00 மணிக்கு பின் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார்கள். அதற்கு பின் தேசிய, மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த கட்சி சின்னங்கள், சுயேச்சைக்கு அவர்களுக்குரிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும்
-
ஆனைமலையில் கொப்பரை ஏலம்
-
கோவிலில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு நித்திய பூஜை
-
அரங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ. 29 லட்சம் காணிக்கை
-
பிரச்சார யுக்தி மாறினாலும் கிராமங்களில் 'கெத்து' காட்டும் சுவர் விளம்பரம்
-
கக்கராயன் மலை குகையில் சிறுத்தை வனத்துறை மெத்தனம்! நள்ளிரவு வேட்டையால் மக்கள் அச்சம்
-
தி.மு.க. அரசு எங்களை கண்டுக்கவே இல்லை :சின்னவேடம்பட்டி 'இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன்' குற்றச்சாட்டு