ஊசுடு தொகுதியில் அதிகம் ஏனாமில் குறைந்த ஓட்டு பதிவு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளுக்கு பதிவான ஓட்டு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு அளித்தனர். அதன்படி, நேற்று தொகுதி வாரியாக பதிவான மொத்தம் ஓட்டு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் 93.59 சதவீதம் ஓட்டுப் பதிவானது. திருபுவனை (தனி) 94.09, ஊசுடு (தனி) 94.39, மங்கலம் 94.14, வில்லியனுார் 90.23, உழவர்கரை 87.83, கதிர்காமம் 88.75, இந்திரா நகர் 90.45, தட்டாஞ்சாவடி 87.10, காமராஜர் நகர் 87.22, லாஸ்பேட்டை 88, காலப்பட்டு 91.72, முத்தியால்பேட்டை 89.14, ராஜ்பவன் 87.89, உப்பளம் 89.96, உருளையன்பேட்டை 89.52, நெல்லித்தோப்பு 91.24, முதலியார்பேட்டை 88.73, அரியாங்குப்பம் 90.30, மணவெளி 92.27, ஏம்பலம் (தனி) 93.92, நெட்டப்பாக்கம்(தனி) 93.81, பாகூர் 94.35, மாகே 77.41, ஏனாம் 93.35 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக ஊசுடு தொகுதியிலும், குறைந்தபட்டசமாக மாகே தொகுதியிலும் ஓட்டுப் பதிவாகியுள்ளது. இத்தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பெண்ணை வெட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் * மூவரிடம் போலீஸ் விசாரணை
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்