லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பரபரப்பு புகார்
பெங்களூரு: ''லோக்சபா தொகுதிகளை மறு சீராய்வு செய்வதால், தென்மாநிலங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும். தென்மாநிலங்களின் பணத்தை, வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சிக்கிறது,'' என, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் குற்றம் சாட்டினார்.
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தன் இல்லத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளை, மறு சீராய்வு செய்வதால் தென்மாநிலங்களுக்கு அநியாயம் ஏற்படும் என, நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தென்மாநிலங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். வரும், 16ம் தேதி முதல், லோக்சபா சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசு எந்த விதமான மசோதா தாக்கல் செய்யும் என, பார்க்க வேண்டும். தென்மாநிலங்களின் பணத்தை, வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல சதி நடக்கிறது. கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகளை பிரிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இது மேலும் அபாயகரமானது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெங்களூரில் மக்கள் தொகை, 60 முதல் 70 லட்சமாக இருந்தது. இப்போது, 1.40 கோடியாக உள்ளது. கர்நாடக மக்கள் தொகை ஐந்து கோடியில் இருந்து, ஏழு கோடியாக அதிகரித்துள்ளது. பொருளாதாரம் உட்பட பல சவால்களை மாநிலம் சந்திக்கிறது. இதைப்பற்றி அனைத்து கட்சிகளும் ஆலோசிக்க வேண்டும்.
மேற்காசியாவில் நடக்கும் போரால், நம் நாடு பல பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு வாய் திறக்கவில்லை. இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி, வேறு விதமான செய்தியை தெரிவிக்கிறார். பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் சூழ்நிலையை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் என்பதை, மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை. மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகளுக்கு, பிரதமரே நேரடி பொறுப்பாளி.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.அடுத்த இரண்டு ஆண்டுகளும், சித்தராமையாவே முதல்வர் என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார். இதைப்பற்றி அவரிடம் தான், கேள்வி எழுப்ப வேண்டும். அவர் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். அவர் என்ன கூறினாரோ, அதை நாங்கள் கேட்க வேண்டும்.
என் அண்ணன் சிவகுமார் முதல்வராக வேண்டும் என்ற ஆசை, எனக்கு உள்ளது. ஆனால், இன்றே முதல்வராவார் என்று கூறவில்லை. நேரம் வரும் போது பேசலாம்.
பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறும். நாங்கள் வாக்குறுதி திட்டங்களை அளித்துள்ளோம். வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். எனவே, எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். பாகல்கோட்டில் காங்., தோற்கும் என்பது வெறும் வதந்தி.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கல்வி வளர்ச்சியில் தி.மு.க., அரசு பெரும் பங்காற்றியுள்ளது: தே.மு.தி.க., வெங்கடேசன்
-
சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி எண் வழங்க அலுவலர்கள் தீவிரம்
-
இரண்டாம் கட்டமாக ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு பணி இடங்கள் தேர்வு
-
வி.சி.கட்சி வேட்பாளர் வன்னிஅரசு கவுன்சிலரிடம் ஆதரவு திரட்டினார்
-
எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்: மாஜி அமைச்சர் சண்முகம் பிரசாரம்
-
கருணாநிதி வழியில் ஏழை குடும்பங்களில் பொருளாதார நிலையை கல்வி மூலம் உயர்த்தும் ஸ்டாலின் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்