மின் கசிவால் வீட்டு ஏ.சி.,யில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு, மோசிகீரனார் வீதியை சேர்ந்தவர் அங்கூர் அகர்வால். இவரது வீட்டு ஏ.சி.,யில் மின் கசிவு காரணமாக நேற்று முன்-தினம் இரவு 9:55 மணிக்கு தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் ஏ.சி., மர அலமாரி, வீட்டு உபயோக பொருட்கள், துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீக்கிரையாகின. சேத மதிப்பு ரூ.1 லட்சமாக கணக்-கிடப்பட்டுள்ளது.

Advertisement