கோவில் நகரங்களில் வீரமணிக்கு அனுமதி இல்லை; பிரசாரத்துக்கு தடை போட்டது திமுக

35

-நமது நிருபர்-


பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் நகரங்களில் திக வீரமணி பிரசாரம் செய்வதற்கு திமுக தலைமை தடை விதித்துள்ளது. அதுபோலவே, முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதிகளிலும் அவர் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


திக தலைவராக இருக்கும் வீரமணி, சட்டமன்றத் தேர்தலுக்கு பிரசாரத்தை துவக்கி உள்ளார். அவர் ஹிந்து மதத்துக்கு எதிராகவும், பக்தர்கள் மனம் நோகும்படியும் வாய்க்கு வந்தபடி பேசுவதால், அவர் பிரசாரம் செய்வதை வேட்பாளர்கள் யாரும் விரும்புவதில்லை.

இதை உணர்ந்த திமுக தலைமை, பெயரளவுக்கு மட்டுமே அவரை பிரசாரம் செய்ய விடுகிறது. அதுவும் அவரது நச்சரிப்பு தாங்காமல், ஏதோ சில தொகுதிகளில் மட்டும் போனால் போகட்டும் என்று பிரசாரம் செய்ய அனுமதிக்கின்றனர்.

குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்கும் அவருக்கு அனுமதி கிடையாது.

அதேபோல, கோவில் நகரங்களான கும்பகோணம், பழனி, ஸ்ரீரங்கம், திருப்பரங்குன்றம் உள்ளிட்டவற்றிலும் பிரசாரம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் நகரங்களில் வீரமணியை பேச விட்டால், தங்களுக்குத்தான் பாதிப்பு என்று கருதி திமுக தலைமை இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

பக்தர்கள் பாதிக்கப்படும் விவகாரங்களில், ஹிந்துக்களுக்கு எதிரான முடிவுகளையே எடுப்பதை வழக்கமாகக் கொண்ட திமுக, தேர்தல் நேரத்தில் வீரமணி வீண் வம்பை உருவாக்கி விடுவார் என்று பயந்து இத்தகைய தற்காப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது.


மற்றொரு திமுக ஆதரவாளரான சுப வீரபாண்டியனும், வீரமணியை போலவே ஹிந்து மதத்துக்கு எதிராக, பக்தர்களுக்கு எதிராக தாறுமாறாக பேசக்கூடியவர். அவரது தேர்தல் பிரசார பயணத்திட்டமும் வெளியாகி உள்ளது. அதிலும், பிரபல கோவில் நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement