யானையிடம் உயிர் தப்பியவர் மருத்துவமனையில் அனுமதி

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு டான் டீ பகுதியில்,யானையிடம் சிக்கி தப்பியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பந்தலுார் அருகே படைச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்,55. கூலி வேலை செய்யும் இவர் நேற்று காலை, 6:-30 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக சேரங்கோடு டான்டீ வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்திலிருந்து இறங்கி வந்த, 3 யானைகள் இவரை துரத்தி உள்ளன. அதில் கிருஷ்ணன் ஓடி தேயிலை தோட்டத்திற்குள் விழுந்து உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் முத்தமிழ் தலைமையிலான வனக்குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். உடலில் காயங்கள் இருந்ததாலும், காலில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் மேலும், சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement