ஓடும் பைக்கில் திடீர் தீ ;வாலிபர் உயிர் தப்பினார்
கடலுார்: கடலுாரில் வாலிபர் சென்ற பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மஞ்சக்குப்பம் பாரதி சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூருக்கு நேற்றிரவு 8:00 மணிக்கு பைக்கில் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
பாரதிசாலையில் அண்ணாபாலம் வளைவில் திரும்பிய போது, பைக் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. உடன், பைக்கை ஓட்டி வந்தவர் அதிர்ச்சியடைந்து பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பினார். அப்போது, அங்கு முதல்வர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பைக்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் பைக் எரிந்து சேதமானது. இதுகுறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்; உளுந்துார்பேட்டை வேட்பாளர் குமரகுரு உறுதி
-
நாராயணபுரம் ஏரியில் மூழ்கி மாயமான வாலிபர் உடல் மீட்பு
-
தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது ;வில்லிவாக்கம் விஜயகுமார் ஆக்ரோஷ பேச்சு
-
இஸ்திரி போட்ட அ.தி.மு.க., வேட்பாளர்; திருவொற்றியூரில் கவனம் ஈர்த்த ஓட்டு சேகரிப்பு
-
'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகன வசதி; அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் வாக்குறுதி
-
ஆயிரம்விளக்கில் 'விசேஷ' துண்டு பிரசுரம் ;பரபரப்பை கிளப்பிய த.வெ.க., பிரபாகர்
Advertisement
Advertisement