வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்புவனம் அருகே வில்லியரேந்தலை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் தனது மூத்த மகளை திருப்புவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்க தன் தாயுடன் சென்றார்.
அந்த பள்ளி முதல்வர் ராமமூர்த்தி, நீங்கள் எம்.ஏ., ஆங்கிலம் முடித்துள்ளீர்கள் தங்கள் பள்ளியில் ஆசிரியராக வரலாமே என்று பிரியங்காவிடம் கேட்டார். அப்போது, தன் மகள் 5 வருடமாக டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதாகவும், 'கட் ஆப்' மார்க்கில் தேர்ச்சி பெறமுடியவில்லை எனவும் பிரியங்காவின் தாய் சாந்தி கூறினார்.
ராமமூர்த்தி தனக்கு தெரிந்த நண்பர்கள் மத்திய, மாநில அரசு வேலை வாங்கித் தருகிறார்கள். மதுரையில் அவர்கள் பல வருடமாக அரசு கோச்சிங் சென்டர் நடத்துகின்றனர். தானும் அதில் பங்குதாரர் என கூறியுள்ளார்.
பின் மதுரையில் கோச்சிங் சென்டர் நடத்தும் இப்ராஹிம்பாபு, முகம்மது இலியாஸ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அவர்கள் பிரியங்காவுக்கு மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அதற்கு ரூ.10 லட்சம் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். வேலை வாங்கி கொடுத்ததாக கூறி பலரின் பணிநியமன ஆணைகளை காட்டி நம்ப வைத்துள்ளனர். இதை நம்பிய பிரியங்கா அவர்களிடம் ரூ.10,02,500 வழங்கினார்.
பின் பிரியங்காவிடம் வருமான வரித்துறையில் நியமனம் செய்ததாக போலி கடிதத்தை வழங்கிய அவர்கள், பெங்களூருக்கு அழைத்து சென்று பணிபுரிய வைத்துள்ளனர். சம்பளம் கிடைக்காததால் சந்தேகமடைந்த பிரியங்கா, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருப்பி தராமல் ராமமூர்த்தி, இப்ராஹிம்பாபு மிரட்டியதால் சிவகங்கை குற்றப்பிரிவு போலீசில் பிரியங்கா புகாரளித்தார். போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எப்புடிமேலும்
-
இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
-
மீனாட்சி அம்மன் கோயில் தேர்களுக்கு 7 டன் எடையில் புதிய இரும்பு சக்கரங்கள்: வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்
-
ஈரோடில் பணிமனை திறப்பு ;காங்., நிர்வாகிகள் 'ஆப்சென்ட்'
-
மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
-
த.வெ.க., பிரசாரத்தில் 'அலப்பறை' ;நோயாளிகள், முதியோர் அவதி
-
நாகர்கோவிலில் வரும் 15ல் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'