நடைபாதை வியாபாரிகள் வங்கி கடன்கள் ரத்து:செயல்வீரர்கள் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி
திண்டுக்கல்:‛‛அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நடைபாதை வியாபாரிகளின் கூட்டுறவு கடன் ரத்து செய்யப்படும்,'' என திண்டுக்கல் அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்லில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டனி செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் விலை வாசி விஷம் போல் உயர்ந்துள்ளது. இதுகுறித்து பட்டிமன்றம் நடத்த தி.மு.க., மேடை போடட்டும். நாங்கள் வந்து பேசுகிறோம். 234 தொகுதி மக்களும் தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும் என்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. பெண்களுக்கு ரூ.ஆயிரம் கொடுத்து விட்டதால் தி.மு.க.,விற்கு ஓட்டுப்பதிவாகிவிடும் என நினைக்கின்றனர். ஒரு வீட்டுக்கு மளிகைப் பொருட்கள் வாங்க ரூ.5 ஆயிரத்திற்கு மேல் தேவைப்படுகிறது. பழனிசாமி 220 தொகுதிகளுக்கு சென்று முதல்வர் ஸ்டாலினின் முகமூடியை கிழித்து வருகிறார். தி.மு.க., 505 வாக்குறுதிகளை கூறி ஏமாற்றியது. ஆனால் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளின் கூட்டுறவு கடன் ரத்து செய்யப்படும் என்றார். அமைப்பு செயலாளர் மருதராஜ்,பா.ஜ., மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்டத் தலைவர் தனபாலன், பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜான்கென்னடி,மாநகராட்சி அ.தி.மு.க.,எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன், ஜெ. பேரவை பாரதிமுருகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் பங்கேற்றனர்.
மேலும்
-
இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
-
மீனாட்சி அம்மன் கோயில் தேர்களுக்கு 7 டன் எடையில் புதிய இரும்பு சக்கரங்கள்: வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்
-
ஈரோடில் பணிமனை திறப்பு ;காங்., நிர்வாகிகள் 'ஆப்சென்ட்'
-
மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
-
த.வெ.க., பிரசாரத்தில் 'அலப்பறை' ;நோயாளிகள், முதியோர் அவதி
-
நாகர்கோவிலில் வரும் 15ல் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'