தி.மு.க., மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது: சிற்றரசு நம்பிக்கை
சென்னை: ''தேர்தல் அறிக்கையால், மக்கள் மத்தியில், தி.மு.க., மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது,'' என, அண்ணா நகர் வேட்பாளர் சிற்றரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அண்ணா நகர் தொகுதி தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்ட செயலர் சிற்றரசு போட்டியிடுகிறார். ஷெனாய் நகரில் திரு.வி.க., பூங்கா, அண்ணா நகர் போகன்வில்லா பூங்கா உள்ளிட்ட இடங்களில் நேற்று, மக்களை சந்தித்து, தொகுதி பிரச்னைகளை கேட்டறிந்தார்.
அப்போது, மக்களிடம் தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், வாக்குறுதிகள், அண்ணா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, சிற்றரசு எடுத்துரைத்தார். டி.பி., சத்திரம் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரித்தார். உடன் மாவட்ட, பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இருந்தனர்.
பிரசாரத்தின்போது, சிற்றரசு பேசியதாவது:
சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்திருக்கும் வாக்குறுதிகளே கதாநாயகன். பிற கட்சியினரைப் போல பொய் வாக்குறுதி அளிக்காமல், எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களையும், பொதுமக்களுக்கான நலனையும் கருத்தில் கொண்டு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை, மக்கள் மத்தியில் தி.மு.க., மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள், முதலீடுகள் வாயிலாக, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., அரசு சிறப்பாக கையாண்டு இருக்கிறது.
குறிப்பாக, சென்னையின் உட்கட்டமைப்பு மேம்பாடில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உங்களின் நம்பிக்கைக்குரிய ஆதரவால், தி.மு.க., அபார வெற்று பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
91 அரசு பள்ளிகளில் 235 பேர் சேர்க்கை
-
மின் கசிவால் வீட்டு ஏ.சி.,யில் தீ விபத்து
-
இரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்
-
வி.இ.டி., கலை அறிவியல் இருபாலர் கல்லுாரியில் சாதனையாளர் தினம்
-
மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
-
நாளை முதல் 'பூத் சிலிப்' வீடு வீடாக வழங்க ஏற்பாடு