கோவிலில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு நித்திய பூஜை

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு, நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. காமிக ஆகமப்படி இப்பூஜைகள் நடத்தப்படுகிறது.

காலை, 6:00 மணிக்கு, திருவனந்தல், காலை, 7:30 மணிக்கு, கால சந்தி, முற்பகல், 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை, 5:00 மணிக்கு, சாய ரட்சை, இரவு, 7:00 மணிக்கு, அர்த்தசாம பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் அம்மனுக்கு, இரண்டு கால அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

அதே போல், சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, தீபாவளி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தனுர் மாதம், தைப்பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

ஒவ்வொரு மாதாந்திர பவுர்ணமியின் போதும், 9 விதமான இனிப்பு, காரம் படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

Advertisement