ஆனைமலையில் கொப்பரை ஏலம் 

ஆனைமலை: ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில் கிலோவுக்கு அதிகபட்சமாக, 157.99 ரூபாய் விலை கிடைத்தது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் (பொ) ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை,399 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு,150 ரூபாய் முதல், 157.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.

இரண்டாம் தர கொப்பரை,418 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 118 முதல்,149 ரூபாய் வரை விலை கிடைத்தது. மொத்தம்,817 கொப்பரை மூட்டைகளை, 218 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

இந்த வாரம், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 317 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Advertisement