திருப்போரூரில் ஏற்கப்பட்ட 14 மனுக்களில் 3 வாபஸ்
திருப்போரூர்: திருப்போரூர் சட்டசபை தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர் மனுக்களில், 14 ஏற்கப்பட்ட நிலையில், மூன்று மனுக்கள் வாபஸ் வாங்கப்பட்டன.
திருப்போரூரில் அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் உட்பட 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் தேர்தல் பார்வையாளர் அபிஜித் அகர்வால், தேர்தல் அலுவலர் விஜயகுமாரி ஆகியோர் முன்னிலையில், வேட்பு மனு பரிசீலனை நடந்தது.
இதில், பா.ம.க., வேட்பாளர் பாலு, வி.சி.க., வேட்பாளர் பன்னீர்தாஸ், நாம் தமிழர் வேட்பாளர் அம்பேத்ராஜன், த.வெ.க. வேட்பாளர் விஜயராஜ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வினோத் உள்ளிட்ட 14 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற 17 மனு தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல் இன்று மாலை 3:00 மணி வரை நேரம் இருந்தாலும், நேற்று ராமதாஸ் தரப்பு பா.ம.க., வேட்பாளர் பொற்செழியன், அன்புமணி தரப்பு பா.ம.க., மாற்று வேட்பாளர் ஏழுமலை, த.வெ.க., மாற்று வேட்பாளர் ஸ்ரீவத்ஸஸ்ரீ ஆகியோர் மனுக்களை திரும்ப பெற்றனர்; தற்போது 11 வேட்பாளர்கள் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கல்லீரல் சிறப்பு மருத்துவர் விழுப்புரம் வருகை
-
தேர்தல் பணியில் 2,198 மாணவர்கள் பொதுமக்கள் பாராட்டு
-
மாஜி அரசு ஊழியர் சாவு: போலீசார் விசாரணை
-
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை :அரசு மீது மாஜி முதல்வர் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் வி.சி., தலைவர் பிரசாரம்
-
அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்