அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, அவரது மகன் கவுன்சிலர் ரகு ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.

அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சி சேர்மன் விநாயகமூர்த்தி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் விநாயகமூர்த்தி அவரது மகன் ரகு தி.மு.க., வில் இணைந்தனர்.

அவருடன் அரகண்டநல்லுார் அ.தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பாலு, வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வைஷாலி, வழக்கறிஞர் ராஜலட்சுமி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரமேஷ், தொகுதி இணைச் செயலாளர் சரவணன் ஆகியோரும் தி.மு.க.,வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, வேட்பாளர் கவுதம சிகாமணி உடன் இருந்தனர்.

Advertisement