கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் வி.சி., தலைவர் பிரசாரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி வி.சி., வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் திருமாவளவன் ஓட்டு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதி வி.சி., வேட்பாளர் மாலதியை ஆதரித்து, அக்கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நைனார்பாளையம், பெரியசிறுவத்துார், தென்கீரனுார், நீமங்கலம், விருகாவூர், தியாகதுருகம் பகுதிகளில் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் நேற்று பானை சின்னத்திற்கு ஒட்டு சேகரித்தார்.
பிரசாரத்தில் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பேசுகையில், 'நான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியை விட, கள்ளக்குறிச்சியில் வி.சி., வேட்பாளர் மாலதி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவரை வெற்றி பெறச் செய்வது எனது கடமையாக எண்ணுகிறேன். எனவே, தி.மு.க., - காங்., - வி.சி.,- தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கப்பன், தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சத்தியமூர்த்தி, கனகராஜ், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர்கள் புவனேஸ்வரி பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
மேலும்
-
பைக் - லாரி மோதல் புதுமண தம்பதி உயிரிழப்பு
-
சிறுமி திருமணம்: வாலிபருக்கு 10 ஆண்டு
-
இரட்டை கொலை நடந்த கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
-
தேர்தல் புறக்கணிப்பு கூட்டத்தில் மோதல்
-
சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்
-
காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் 37 நிபந்தனைகளுடன் அனுமதி மரங்களுக்கு 'பாதுகாப்பு கவசம்'