மாஜி அரசு ஊழியர் சாவு: போலீசார் விசாரணை

அரியாங்குப்பம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் இறந்து கிடந்து குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன்,64; தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார்.

ஜனார்த்தனன் கடந்த 3 நாட்களாக வெளியில் வராமல் வீட்டு கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் குடியிருந்தவர்கள் சென்னையில் வசித்து வரும் அவரது மகள் பிரித்திக்கு தகவல் கொடுத்தனர். நேற்று வந்த அவர் வீட்டை திறந்து பார்க்கும் போது, தலையில் காயத்துடன் ஜனார்த்தனன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement