சிறுமிக்கு பாலியல் தொல்லை காய்கறி வியாபாரி பிடிபட்டார்

புதுடில்லி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.

டில்லி புறநகர் நிஹால் விஹாரில் வசிக்கும் 11 வயது சிறுமி, 4ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காய்கறி வியாபாரி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அலறியபடி சிறுமி வீட்டுக்குள் ஓடினார். காய்கறி வியாபாரியும் தப்பி ஓடினார். சிறுமியின் பெற்றோர் நிஹால் விஹார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமி வாக்குமூலம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப்- பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை அடையாளம் கண்டனர். தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில், லட்சுமி பூங்கா அருகே, தர்மேந்தர்,25, என்ற காய்கறி வியாபாரியை நேற்று கைது செய்தனர்.

சிறுமியிடம் சில்மிஷம் செய்ததை தர்மேந்தர் ஒப்புக்கொண்டார். விசாரணை நடக்கிறது.

Advertisement