நெல்லிக்குப்பத்தில் பயிற்சி: 93 பேர் மின்வாரிய தேர்வில் வெற்றி

நெல்லிக்குப்பம்: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கள பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

இதற்காக நெல்லிக்குப்பம் கல்வி அறக்கட்டளையும், மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கமும் இணைந்து இலவச பயிற்சி வகுப்பு நடத்தினர்.

தலைவர் ரமேஷ்,செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் குமர வேல், நகராட்சி சேர்மன் ஜெயந்தி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மின்வாரிய உதவியாளர் பிரபு ஆகியோர் இலவசமாக பயிற்சி அளித்தனர்.

இந்த தேர்வுக்கான முடிவு நேற்று வெளியிடபட்டது. இங்கு பயிற்சி பெற்ற 94 பேரில் 93 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்றவர்களை இன்ஸ்பெக்டர் வேலுமணி, சர்க்கரை ஆலை அதிகாரிகள் அருண்பிரசாத், சத்யா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement