நாங்களும் விஜய் ரசிகர்கள் தான்: அமைச்சர் அனிதா பளிச் பதில்
நாங்களும் விஜய் ரசிகர்கள் தான் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் நேற்று முன்தினம், தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு ரசிகர்கள் செல்லத்தான் செய்வர். நாங்களும் விஜய் ரசிகர்கள் தான். ஓட்டு போடும் போது அந்தந்த கட்சிகளுக்கு என ரசிகர்கள் ஓட்டு போடுவர். திருச்செந்துார் தொகுதியில் த.வெ.க., வேட்பாளர் டிபாசிட் பறிபோய்விடும்.
பா.ஜ.,வால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளர் மாதிரி தான் விஜய். அவர் சிறுபான்மை இன மக்கள் ஓட்டுகளை பிரிப்பதற்காக திட்டமிட்டு வந்துள்ளார். ஆனால், சிறுபான்மை இன மக்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் நன்கு படித்தவர்கள் என்பதால், ஒட்டுமொத்தமாக மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஓட்டு போடுவர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் விழாது. காலில் விழுந்து வந்த அவர், காலை வாரி விட்டதால் அவருக்கு முக்குலத்தோர் ஓட்டு போட மாட்டார்கள். பா.ஜ., தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது.
அவர்களது கட்டுப்பாட்டில் தான் சினிமா உள்ளது. ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் விஜய், அதை பற்றி பேசாமல் தி.மு.க.,வை 'அட்டாக்' செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
சார், "நடிகனை, நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும்" என்று கலாய்த்து விட்டாராம்.பாலி..... சார் நடிகர்தானே? ஏன் அங்கு மட்டும் கொத்தடிமையாக வேலை செய்கிறீர்கள்? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு துணை முதல்வர் ஒரு நடிகையின் புகைப்பத்தை வளைத்தளத்தில் பகிர்ந்து எட்டுக் கோடி மக்களுக்கும் பெருமை சேர்க்கிறார். அதைப்பற்றி பேச துப்பில்லை.மேலும்
-
ஏ.ஐ. சர்வதேச மாநாடு
-
7.5 மருத்துவ இட ஒதுக்கீட்டில் பயனடைந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 71 மாணவர்கள்
-
டீ கடையில் போண்டா சுட்டு கொடுத்து ஓட்டு வேட்டையாடிய மதியழகன் எம்.எல்.ஏ.,
-
தேர்தல் விதி மீறியதாக இரு வழக்குகள் பதிவு
-
விளையாட்டு விழா
-
தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள்