ஸ்கூட்டி மீது மினி லாரி மோதி மகள் கண்ணெதிரே தாய் உயிரிழப்பு
மணவாள நகர்: மணவாள நகர் அருகே 'ஸ்கூட்டி' பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில், மகள் கண் முன்னே தாய் உயிரிழந்தார்.
கடம்பத்துார் ஒன்றியம் புதுவள்ளூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மனைவி மஞ்சுளா, 53.
இவர், நேற்று முன்தினம் மாலை, மகள் வைஷ்ணவி, 23, என்பவருடன், 'ஸ்கூட்டி' பைக்கில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பாப்பரம்பாக்கம் கால்நடை மருத்துவமனை அருகே வந்தபோது, எதிரே வேகமாக வந்த மினி லாரி, ஸ்கூட்டி பைக் மீது மோதியது.
இதில், மஞ்சுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வைஷ்ணவியை அப்பகுதி மக்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து ரவி அளித்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
Advertisement
Advertisement