பாரபட்சம் இன்றி வாகன சோதனைக்கு கோரிக்கை

மந்தாரக்குப்பம்: சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படு த்தும் வகையில் பறக்கும் படையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்துக்கு முறையான ஆவணம் இல்லை என கூறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற சம்பந்தம்பட்ட அலுவலகத்திற்கு வியாபாரிகள் நேரில் சென்று முறையான ஆவணங்கள் மற்றும் பில்களை சமர்பித்து ஆர்டர் நகல் வாங்கிய பின் பணத்தை பெற்றுக் கொள்ள கால நேரம் விரயம் ஆகிவிடுகிறது என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் அரசியல் கட்சியினர் கட்சி கொடியுடன் செல்லக்கூடிய கார்களை பறக்கும் படை அலுவலர்கள் சோதனை மேற்கொள்ளாமல் உள்ளனர் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே வாகன சோதனையின் போது பாரபட்சம் இன்றி அனைத்து வாகனங்களை யும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement