மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஓட்டு போட செல்வதற்கு இலவச பஸ்
கோவை:சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவை எட்டும் நோக்கில், தேர்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டு பதிவை உறுதி செய்ய, தேர்தல் பிரிவு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 3,563 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் 8 துணை ஓட்டுச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில், 189 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில், வாக்காளர்கள் பாதுகாப்பாக ஓட்டு பதிவு செய்ய, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வனத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பவன்குமார் கூறுகையில்,“அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும் தொகுதி வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்டல மற்றும் உதவி மண்டல அலுவலர்களும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், வரும் 23ம் தேதி நடைபெறும் தேர்தல் நாளன்று, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இதற்கான உரிய அறிவுறுத்தல்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.” என்றார்.
மேலும்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்
-
ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு ஏப்.14 ல் இயங்காது