கடலுார் த.வெ.க., வேட்பாளரின் உறவினர் வீட்டில் அதிரடி ரெய்டு
கடலுார்: கடலுார் தொகுதி த.வெ.க., வேட்பாளரின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடலுார் சட்டசபை தொகுதியில் த.வெ.க., வேட்பாளராக ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவரது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, கடலுார் சூரப்பநாயக்கன்சாவடியில் உள்ள தனது மைத்துனர் புகழேந்தி வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர், நேற்றிரவு 7:00 மணிக்கு புகழேந்தி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும், பணம் தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா எனவும், சோதனை நடத்தினர். சோதனையின் போது, வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. 10:30 மணிக்கு பிறகும் சோதனை நீடித்தது. அதேபோல, அவரது சுவீட்ஸ் கடையிலும் சோதனை நடந்தது.
த.வெ.க., வேட்பாளரின் உறவினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை