ராமானுஜர் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம், 12ம் தேதி நடக்கிறது.

பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜர், கூரத்தாழ்வான், முதலியாண்டான் பிம்ப ஸ்தாபன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இம்மாதம், 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. விழாவையொட்டி இம்மாதம், 10ம் தேதி முதல் கால ஹோமம், சாற்றுமுறை, இரண்டாம் கால ஹோமம், சாற்றுமுறை நடக்கிறது. 11ம் தேதி மூன்றாம் கால ஹோமம் தொடர்ந்து விமானத்தில் கலச ஸ்தாபனம், ஸ்ரீ ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இம்மாதம், 12ம் தேதி காலை, 7:00 மணிக்கு ஐந்தாம் கால ஹோமம், தசதானம் தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா செய்துள்ளது.

Advertisement