பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்ததேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. வரும் 20ம் தேதி இப்பணிகள் நடக்கிறது.
தமிழகத்தில், பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்கள் தேர்வு காலங்களாகும். நடப்பாண்டுக்கு கடந்த மாதமும், இம்மாதம் முதல்வாரமும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் நடந்த இத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் எழுதினர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி நேற்று துவங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பள்ளி; குமார் நகர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் இப்பணிகள் நடைபெறுகின்றன. மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிமுத்து, மணிமாறன் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் இப்பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். திருத்தும் பணி வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என, மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன்,
தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாக உள்ளது என கல்வித்துறையனர் தெரிவித்தனர்.
மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்