விஸ்வகர்மா கைவினைஞர் சங்கம் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் செல்வராஜ், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., அமீரக அணி மாநில செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் உளுந்துார்பேட்டை தொகுதி வேட்பாளர் குமரகுரு, தனக்கும் மாவட்டத்தில் உள்ள பிற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்களான கள்ளக்குறிச்சி ராஜிவ்காந்தி, சங்கராபுரம் ராகேஷ் மற்றும் பா.ம.க., வேட்பாளரான ரிஷிவந்தியம் செழியன் ஆகியோருக்கு, ஆதரவு அளித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து வரும் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் விஸ்வகர்மா கைவினைஞர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பச்சமுத்து, சரவணன், ஆறுமுகம், விஜய், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, அ.தி.மு.க., ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவனுக்கு '5 ஆண்டு'
-
பள்ளி மாணவருக்கு விளையாட்டு உபகரணம்
-
வலிப்பால் குழந்தை பலி
-
வறட்சியால் காயும் பயிர் விவசாயிகள் வேதனை
-
116 வேட்பாளர்களில் 21 பெண்கள் மட்டுமே! மேடை முழக்கம் வெறும் கோஷம் ------------------------------ அம்பலமான கட்சிகள் 'வேஷம்'
-
கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்