'ஜனநாயகன்' வெளியானதில் அமித்ஷாவின் பங்கு உள்ளது: சொல்கிறார் மாணிக்கம் தாகூர்

சாத்துார்: ''ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் அமித்ஷாவின் பங்கு உள்ளது. இந்திய சினிமா துறையை மிரட்டுவதற்காக அவர் செய்த செயல் இது ,'' என காங்.,எம்.பி.,மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

சாத்துாரில் அவர் கூறியதாவது:

ஜனநாயகன் திரைப்படம் சட்ட விரோதமாக வெளியான விவகாரம் இந்திய சினிமா துறையை ஆட்டி வைக்கின்ற செயல். அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு உள்ளது. மிரட்டுவதற்காக அமித்ஷா செய்த செயல் இது. பா.ஜ., விற்கு ஜால்ரா அடிக்கும் திரைப்படங்கள் தான் அதிகம் வருகிறது. பா.ஜ.,வின் சித்தாந்தத்திற்கு எதிராக யாரும் திரைப்படம் எடுக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு நடந்ததாக பார்க்கிறேன். ஒட்டு மொத்த சினிமா துறையை தனது கட்டப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அமித்ஷா நினைக்கிறார்.

த.வெ.க., தலைவர் விஜய் செயல்பாடுகள் நிலை குலைய வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டது. இத்திரைப் படத்தை தற்போது வரை இணையதளத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தமிழக அரசியலில் பெரிய குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது என்றார்

Advertisement