மரத்தில் வேன் மோதி 3 பேர் படுகாயம்

காங்கயம்:காங்கயத்தில், ஈரோடு - பழநி ரோட்டில் நத்தக்காடையூரில் இருந்து, காங்கயம் நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அய்யாசாமி நகர் காலனி பிரிவில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதியது. அங்கிருந்த சலுான் கடை சேதமடைந்தது.

அருகே இருந்த டூவீலர், கார் மற்றும் விநாயகர் கோவில் கம்பி வேலி ஆகியவை சேதமடைந்தது. வேன் டிரைவர் நளன், 64, காங்கயத்தை சேர்ந்த சலுான் தொழிலாளி நாராயணசாமி, 70, முடிவெட்ட வந்த பொன்னுசாமி, 65 என, மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement