தியாகதுருகம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி தியாகதுருகம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
விருகாவூர், வடபூண்டி, நாகலுார், வரஞ்சரம், வேளாக்குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தபோது பேசுகையில், 'அ.தி.மு.க., வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் தோறும் 2,000 ரூபாய், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய், 3 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். சிறுபான்மை மகளிர் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆண்களும் கட்டணம் செலுத்தாமல் அரசு பஸ்சில் பயணிக்கலாம்.
நுாறுநாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். இன்னும் பல திட்டங்களை பெற இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்' என்றார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, பாசறை செயலாளர் வினோத், பா.ஜ., நிர்வாகி ராஜேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை