தியாதுருகம் நகராட்சியாக தரம் உயர்த்த பாடுபடுவேன்: வி.சி., வேட்பாளர் மாலதி உறுதி 

தியாகதுருகம்: 'தியாகதுருகம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பாடுபடுவேன்' என வி.சி., வேட்பாளர் மாலதி உறுதியளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதி வி.சி., வேட்பாளர் மாலதி, தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட உதயமாம்பட்டு, பெரியமாம்பட்டு, புக்குளம் பகுதிகளில் தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், 'தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் தி.மு.க., ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், என்னை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்தால், இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தியாகதுருகம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு பாடுபடுவேன்' என்றார்.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர், நிர்வாகிகள் முரசொலி மாறன், மூர்த்தி, அருள்செல்வன், சிவக்குமார், கோவி முருகன், பாலாஜி, மகாதேவி, அஜித்குமார், அக்பர் உசேன், ராஜசேகர், அமுதா, கருணாநிதி, சிலம்பரசன், வி.சி., தொகுதி பொறுப்பாளர் தனபால், தே.மு.தி.க., நிர்வாகி சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement