ரிஷிவந்தியம் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: வசந்தம் கார்த்திகேயன் வாக்குறுதி

தியாகதுருகம்: 'தமிழ்நாட்டில் ரிஷிவந்தியம் தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவேன்' என வசந்தம் கார்த்திகேயன் வாக்குறுதி அளித்துள்ளார்.

ரிஷிவந்தியம் தொகுதியில் கீழ்பாடி, நுாரோலை, மேலப்பழங்கூர், அவிரியூர், மேலத்தேனுார், லாலாபேட்டை, லா.கூடலுார் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசுகையில், 'மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மூலம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. சாலைகள் தரம் உயர்த்தி மேம்படுத்தப்பட்டுள்ளது. கிராம சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குடிநீர், கழிவுநீர் கால்வாய், பஸ் போக்குவரத்து, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இன்னும் ரிஷிவந்தியம் தொகுதியை பல மடங்கு மேம்படுத்தி தமிழ்நாட்டில் முன்மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்பது எனது திட்டம். இதனை நிறைவேற்ற வரும் தேர்தலில் எனக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், காங்., கிருபானந்தம், தே.மு.தி.க., காமராஜ், வி.சி., வீரவளவன், ஏழுமலை, கோவிந்தராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement