எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
திருப்பருத்திகுன்றம்: காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. கோவில் பகுதியில் உள்ள நிலத்தடி நீரை அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வீட்டு உபயோக தேவைக்கும், கோவில் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்து நீர் பாசி படர்ந்தும், மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், நீர்பிடிப்பு பகுதி குறைந்து வருகிறது. கழிவு நீரும் கலப்பதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், மாசடைந்து வருகிறது.
எனவே, குளத்தை துார்வாரி சீரமைக்க திருப்பருத்திகுன்றம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement