ஓசூரில் நாளை பிராமணர் குடும்ப கலாசார விழா
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சூடப்பா திருமண மண்டபத்தில், நாளை (ஏப்., 12) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஓசூர் பிராமண சமூக குடும்ப கலாசார விழா நடக்கிறது.
கர்நாடகா இசை உலகில் வளர்ந்து வரும் மஹன்யா ஸ்ரீயின் கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. இசை, நடனம், வேதபாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
ஆன்மிகம், தர்மம், குடும்ப மதிப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில், பிரபல பேச்சாளர்கள் பேசுகின்றனர். விழாவில், தலக்காடு ஸ்ரீபாலகிருஷ்ணாநந்த மகா சமஸ்தானம் தலைவர் கோவிந்தானந்த சரஸ்வதி மகா சுவாமிகள் பங்கேற்கிறார். அதேபோல், அந்தணர் என்போர் அறவோர் என்ற தலைப்பில், அனந்தபத்மநாபாச்சாரியார் பேசுகிறார்.
இந்திய சுதந்திர போராட்டங்களில் பிராமணர்களின் பங்கு என்ற தலைப்பில், தமிழருவி மணியன் மற்றும் நமது குடும்பம் என்ற தலைப்பில் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் பேசுகின்றனர். ஏற்பாடுகளை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், கிருஷ்ணாராவ், ரவிசங்கர், ராகவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
மேலும்
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்