மணிமுத்தாறு சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு வீரபாண்டி தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
சேலம்; வீரபாண்டி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் தருண், அமானி கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி பகுதிகளில் நேற்று,
உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசிய
தாவது:
தொகுதி முழுதும் சாலை, சாக்கடை, குடிநீர் உள்-ளிட்ட அடிப்படை வசதிகளை, தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலை-வர்கள் செய்துள்ளனர். எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதால், அதிகாரிக-ளிடம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., என, உரிமையாக கேட்க முடியவில்லை. இத்தொகுதியில் தொடர்ந்து, 3 முறை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தான் இருந்தனர். 15 ஆண்டாக தொகுதியில் வளர்ச்சி இல்லை. திருமணிமுத்-தாறு சாயக்கழிவு பிரச்னைக்கு சட்டசபையில் பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் குடும்பத்தில் ஒருவனாக, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பனமரத்துத்துப்பட்டி ஒன்றிய செயலர் உமா-சங்கர், கம்யூ., கட்சி மாவட்ட செயலர் மோகன், வி.சி., மாவட்ட செயலர் திருமா மாரி, காங்., கட்சி வீரபாண்டி பொறுப்பாளர் சந்திரன், தே.மு.தி.க., நிர்வாகி ரங்கராஜ் உள்ளிட்ட கூட்-டணி கட்சி நிர்வாகிகளும் ஓட்டு சேகரிப்பில் ஈடு-பட்டனர்.
மேலும்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
-
இடுக்கியில் வீடுகளில் பிரசவம் அதிகரிப்பு
-
ரூ.10 கோடி நகைகள் சோதனையில் சிக்கின