எண்ணற்ற திட்டங்களை கொடுத்தவர் இ.பி.எஸ்., சங்ககிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு

சங்ககிரி; சங்ககிரி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் வெற்-றிவேல், நேற்று அரசிராமணி டவுன் பஞ்சாயத்து பகுதிகளான மேட்டுப்பாளையம், காட்டகவுண்-டனுார், குஞ்சாம்பாளையம், மாரிகவுண்டன்காடு, மூலப்பாதை 4 ரோடு, குள்ளம்பட்டி, மலையங்-காடு மலைமாரியம்மன் கோவில், எல்லப்பா-ளையம், கரட்டுக்காடு, கல்லம்பாளையம், ஓலைப்

பாளையம், செட்டிப்பட்டி, ஒடசக்கரை பகுதி-களில், இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேக-ரித்தார்.

தொடர்ந்து தேவூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளான மைலம்பட்டி, மேட்டுக்கடை, தேவூர் பஸ் ஸ்டாப், காணியாளம்பட்டி, புதுப்பாளையம், அம்மாபாளையம், ஏரிவளவு, பெரமச்சிப்பா-ளையம், ஆலந்துார் ஊராட்சிகளில் உள்ள ஆலந்துார், நல்லம்பாளையம், வீராச்சிபா-ளையம், மொத்தையனுார் ஊராட்சி என, 35க்கும் மேற்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது வெற்றிவேல் பேசியதாவது: யார் ஆட்-சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும். இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இப்பகுதிகள் முழுதும் செழுமையாக மாற, 100 ஏரி திட்டத்தை கொண்டு வந்தார். கால்நடை பூங்கா கொண்டு வந்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும்.
இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது எளிமை-யாக, யார் எப்போது வேண்டுமானாலும் பார்க்கக்-கூடியவர். அப்படிப்பட்டவர் அறிவித்த எனக்கு, நீங்கள் ஓட்டுப்போட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலர் காசிராஜன், அரசிராமணி பேரூர் செயலர் காளியப்பன், அ.ம.மு.க., சேலம் மேற்கு மாவட்ட செயலர் அய்-யனார், பா.ம.க., மாவட்ட துணை செயலர் லட்சு-மணன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகளும் ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்-டனர்.

Advertisement