வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை 1ல் விசுக்கனி தரிசனம்
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏப்.,14 காலை விசுக்கனி தரிசனம் நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாத பிறப்பான சித்திரை 1ல் விசுக்கனி தரிசனம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 5:00 மணிக்கு அஷ்டாபிஷேகம் நடக்கிறது. பல்வேறு கனி வகைகளால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பின்னர் அலங்கார கொலு மண்டபத்தில் அனைத்து வகை பழங்கள், காய்கறிகள், இயற்கை சார்ந்த உணவுப் பொருள்கள் தட்டுகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கைநீட்டம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓவியத்தை பாதுகாக்கும் ஊழியர்கள்
-
சாதனை, கொள்கை இல்லாதவர் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
-
அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்கள்
-
காட்டுமன்னார்கோவிலில் ரூ. 1 லட்சம் பறிமுதல்
-
முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் ஐந்தாம் கட்ட தேதிகள் அறிவிப்பு
-
டீக்கடையில் 'ஸ்பிரே' இயந்திரம்; வாடிக்கையாளர்கள் வரவேற்பு
Advertisement
Advertisement