காட்டுமன்னார்கோவிலில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில்: ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் தொகுதி பறக்கும் படை அலுவலர் வேளாண்மைத் துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், சிதம்பரம் - திருச்சி பைபாஸ் சாலை குப்பங்குழி மேம்பாலம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது திருச்சி நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் கொளக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்த ஜக்கிரியா மகன் இக்பால், உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, தாலுக்கா அலுவலக தேர்தல் நடத்தும் அலுவலர் ராணியிடம் ஒப்படைத்தனர்.

Advertisement