டீக்கடையில் 'ஸ்பிரே' இயந்திரம்; வாடிக்கையாளர்கள் வரவேற்பு

வேலுார்: வேலுாரில் ஒரு டீக்கடையில், வெயிலை சமாளிக்க வைக்கப்பட்டுள்ள, 'ஸ்பிரே' இயந்திரம், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

வேலுாரில், ஆண்டுதோறும் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே, தினமும், 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகிறது.

இந்நிலையில், வேலுார் கிரீன் சர்க்கிள் பகுதியில், தனியார் டீக்கடை முன், தண்ணீரை 'ஸ்பிரே' செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து, டீக்கடை ஊழியர்கள் கூறுகையில், 'கோடை வெயிலிலும், டீக்கடைகளை நோக்கி மக்கள் வருகின்றனர். அவர்களை மகிழ்விக்க, குளிர்ந்த நீரால், அவர்கள் மீது 'ஸ்பிரே' செய்யப்படுகிறது. இந்த முறையை, மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்' என்றனர்.

Advertisement