முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் ஐந்தாம் கட்ட தேதிகள் அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று திருவள்ளூரில், ஐந்தாம் கட்ட பிரசாரத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்குகிறார்.
முதல்வர் ஸ்டாலின், ஏப்.,2 திருவாரூரில், முதல்வர் ஸ்டாலின், தன் பிரசாரத்தை துவக்கினார். ஒரு நாளைக்கு, இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஓட்டு சேகரித்து வருகிறார்.
பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில், காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதுடன், அவ்வழியே செல்வோரிடம் ஓட்டு கேட்டு வருகிறார்.
இன்று தனது ஐந்தாம் கட்ட பிரசாரத்தை, திருவள்ளூரில் துவக்குகிறார். மாலை 5:00 மணிக்கு, திருவள்ளூர் மருத்துவக் கல்லுாரி சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு 7:00 மணிக்கு, ராணிப்பேட்டை அம்மூர் சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு வேலுார், இரவு 7:00 மணிக்கு திருப்பத்துார்; 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு தர்மபுரி, இரவு 7:00 மணிக்கு சேலம் சீலநாயக்கன்பட்டி; 16ம் தேதி நாமக்கல் மற்றும் பெரம்பலுார் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
மேலும்
-
பெண்ணை வெட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் * மூவரிடம் போலீஸ் விசாரணை
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்