சாதனை, கொள்கை இல்லாதவர் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
புதுக்கோட்டை: ''இபிஎஸ்சிடம், சாதனையும் இல்லை, கொள்கையும் இல்லை,'' என புதுக்கோட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்பேசினார்.
எது தேவை
புதுக்கோட்டையில் நடந்த திமுக தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்திற்கு மீண்டும் பாஜ அரசால் ஆபத்து வந்துள்ளது. பாஜ அரசையும், அவர்களை தூக்கி சுமக்கும் அதிமுகவையும் வேரோடு வீழ்த்த உங்கள் ஆதரவை கேட்டு வந்துள்ளேன்.இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவதுதமிழகமா? டில்லியா? தமிழகத்துக்கு எது தேவை மக்களாட்சியா?சர்வாதிகாரமா?
காப்பி
நமது திட்டங்ளை பார்த்து, பல மாநிலங்கள் காப்பியெடுக்கிறது. மத்திய அரசே காப்பியடிக்கிறது.திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக தான் ஒரிஜினல். இபிஎஸ் வன்மத்தோடு பேசி வருகிறார்.பாஜ கிளைக்கழக செயலாளராக இருக்கும்இபிஎஸ் தனது சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா ?
எங்காவது சாதனைகளை சொல்லி, கொள்கைகளை சொன்னதை, மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்ததை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால் இபிஎஸிடம் கொள்கையும், சாதனையும் இல்லை. இதனால் சாக்கடைக்கு நிகரான வார்த்தைகளையும், அவதூறுகளையும் பேசி தரமற்றவர் என நிரூபித்து வருகிறார்.
தேஜ என்ற பேரிடரை தமிழகத்தின் பின்வாசல் வழியாக கொண்டு வர தேர்வு செய்யப்பட்டவர் முதன்மை அடிமை இபிஎஸ். அன்னை தமிழுக்கும், தமிழினத்துக்கும் தமிழகத்துக்கும் துரோகம் செய்யும் தேஜ கூட்டணியில் சேர்ந்துள்ளது. அக்கூட்டணி டில்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும். ஊழல்வாதிகளும், துரோகிகளும் காவிக் கும்பலை தோளில் சுமந்து வருகின்றனர்.
நேற்று கூட பாஜ மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ' தமிழகத்தில் தேஜ கூட்டணி அமைப்போம் என்று சொன்னார். இதற்கு இபிஎஸ் என்ன சொன்னார். ஒன்றும் சொல்லவில்லை. தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் நிறைய சொல்லிவிட்டு வருகின்றனர். பியூஷ்கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர், ஹிந்தி திணிப்புக்கு ஆதரவாக மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவோம் என பேசுகின்றனர். இதற்கு எதிராக இபிஎஸ் குரல் கொடுத்துள்ளாரா
ரூ.10 ஆயிரம் கோடி
தர்மேந்திர பிரதான் ஹிந்தியை திணிக்க மும்மொழிக் கொள்கையை ஆதரவாக பேசுகிறார். ஹிந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என 2 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி நிதியை கொடுக்காதது தான் அவரின் வேலை.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் 2 ஆயிரம் கோடி ரூபாயை தருவோம் என அமைச்சர் பிரதான் கூறினார்.ரூ. 2 ஆயிரம் கோடி அல்ல. ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் ஹிந்தியை திணிக்க அனுமதிக்க மாட்டேன். குழந்தைகளின் கல்வி செல்வையும், ஆசிரியர்களின் சம்பளத்தையும்நானே கொடுக்கிறேன் என்று கூறினேன்.
இதுவே இபிஎஸ் இருந்தால் சொல்லியிருப்பாரா ? அடுத்தடுத்து துரோகம் செய்வதற்கு வைத்த பெயர் தான் தேஜ கூட்டணி.
இபிஎஸ்க்கு உண்மையில் தைரியம் இருந்தால், தர்மேந்திர பிரதான் துவங்கி, அமித்ஷா , மோடியை மேடையில் அமர வைத்து, இது தமிழகம், அண்ணாதுரை வகுத்து கொடுத்த இரு மொழிக் கொள்கை மட்டும் தான் இருக்கும் என அவரால் பேச முடியுமா?
மோடி தமிழகம் வரும்போது வணக்கம், நன்றி என்பதை மட்டும் சொல்லி தமிழ் பேச முடியவில்லை என வருத்தப்படுகிறார். பிறகு ஏன் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு நிதி ஏன் கொடுக்கிறீர்கள் என கேட்க முடியுமா?அமித்ஷாவை பார்த்து சமஸ்கிருதம் தான் அனைத்துக்கும் மூலமொழி என சொன்னது தவறு என வாதாட முடியுமா?
நீட் தேர்வு தீர்மானத்தை மத்திய அரசு தான் நிறுத்திவைத்தது என நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால், மத்திய அரசு திருப்பி அனுப்பினதை 2 வருடம் மறைத்துவைத்தவர் தான் இபிஎஸ். அந்த மாதிரி துரோகத்தை செய்தவர் தான் இபிஎஸ்.
மத்தியில் இண்டி கூட்டணி அமைத்து இருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை பிரதமர் வேட்பாளராக இருந்த ராகுல் பலகூட்டங்களில் பேசி உள்ளார்.இவ்வாறு ஸ்டாலின்பேசினார்.
பல டன் கணக்கான சர்க்கரை எறும்பு தின்றதும் சாக்கை கரையான் தின்றதும் 5000 கோடியில் மழையின் மழை நீர் வடிகால் அமைத்ததும் கோயில் நிலங்களை சொத்துக்களை கொள்ளை அடிப்பது போன்ற சாதனைகளை திமுக மட்டுமே செய்ய முடியும்.
திருட்டு, உருட்டு, சுருட்டு என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை
ஸ்டாலின், எடப்பாடி அவர்களை குறை குறை கூற உமக்கு தகுதி இல்லை தத்தி.
முதல்வரே நீங்கள் வெட்கப்படவே மாட்டீர்களா உங்கள் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே சொன்னேன் என்னைப் போல் பலர் சொல்லி இருப்பார்கள் நல்ல ஆலோசர்களை கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டால்
எங்களது முக்கியமான கொள்கை எங்கள் குடும்ப உறுப்பினர்களே கட்சியில் முதன்மை பதவியில் இருக்க வேண்டும். பாதம் பழனிச்சாமி வயல்காட்டில் காங்கிரிட் லோடு போட்டு நடக்க தெரியாதவர். நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியாதவர் இந்தியாவில் கடன் வாங்கி .முதல் மாநிலமாக ஆக்க தெரியாதவர்
இப்படி ஒரு மானங்கெட்ட பிழைப்பு நடத்தி தான் உங்கள் குடும்பம் சோறு தின்ன வேண்டுமா? இப்படி சம்பாதித்து சோறு தின்கிறோமே, சொத்து சேர்க்கிறோமே என்று உறுத்தாதா? அது சரி தின்பது வேறு தானே
குடும்பத்துக்காக கொள்ளையே கொள்கை .....
மக்கள் பணத்தை கொள்ளையடிக்க கொள்கை தீட்டும் திருட்டு கூட்டம். நீங்கள் கொள்ளை அடித்து சம்பாதித்தது 100 தலைமறைக்கு போதும். ஏன் இன்னும் அந்த திருட்டு புத்தி. தமிழக மக்கள் வயிற்றில் அடித்து சேர்க்கும் சொத்து உங்கள் தலைமுறைக்கு ஒட்டாது. கொலை நாசம்...
சரியா சொனீங்க தலைவா. மக்களை சுரண்டுவது ஒரு கொள்கை, போதை மாநிலமாக மாற்றிய சாதனை நம்மகிட்ட இருக்கு. இ பி எஸ் சிடம் இந்த மாதிரி ஒண்ணும் கிடையாது. 5 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன் என்பது முறியடிக்கமுடியாத சாதனை என்பதை உணர்வதற்கு அவரிடம் சிந்திக்கும் திறன் கூட கிடையாது. கலக்கிட்ட தலீவா.
காவிரி நீரை தமிழகம் கொண்டு வர இயலவில்லை. அதை செய்தது அதிமுக தான். ஆள அடிப்படை சட்டம் ஒழுங்கு அறியாத திமுகவின் தலைவர். வேண்டவே வேண்டாம் தீய திமுகமேலும்
-
பெண்ணை வெட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் * மூவரிடம் போலீஸ் விசாரணை
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்