பாதுகாப்பு பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள்
கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவபடை வீரர்கள் ஈடுபட உள்ளதாக எஸ்.பி., சந்தீஷ் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துார், பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை சட்டசபை தொகுதியில் ஏப்.,23ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அச்சமின்றி ஓட்டளிக்கவும், முறையாக தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவும், ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணிக்காகவும் தமிழக போலீசார் இணைந்து மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே ஒரு துணை ராணுவப்படை வீரர்கள் வந்து கொடி அணிவகுப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தற்போது இரண்டாவது குழுவினர் கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர். குஜராத்தில் இருந்து வந்த துணை ராணுவப்படை வீரர்கள் குழுவின் தலைவர் ஹரிலாலை எஸ்.பி.,சந்தீஷ் வரவேற்றார். எஸ்.பி.,சந்தீஷ் கூறியதாவது:
மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 1514 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.இதில் 145 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டம் போலீசாருடன் இணைந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது இரண்டு குழுவில் இருந்து ராமநாதபுரம் வருகை தந்த 170 துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கேரளா சட்டசபை தேர்தல் முடிந்ததும் மூன்று குழு வீரர்கள் வரவுள்ளனர். பல்வேறு பிரிவுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
---
மேலும்
-
துணை தேர்தல் கமிஷனர் ஆய்வு
-
பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
-
நேரு கல்லுாரியில் 3,300 மாணவர்களுக்கு பணி ஆணை
-
'காசாகிராண்ட்' சி.பி.எல். சீசன்-1 திருவிழா: 162 ரன் குவித்த குபேரா தண்டர்ஹாக்ஸ்
-
சுயே. வேட்பாளர்களுக்கு சின்னம் ;தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய்
-
மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஓட்டு போட செல்வதற்கு இலவச பஸ்