அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தபால் ஓட்டு பதிவு செய்ய ஏற்பாடு
கடலுார்: சட்டசபை பொதுத்தேர்தலில் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வரும், 13,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், தபால் ஓட்டினை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது:
மிழக சட்டசபை பொதுத்தேர்தலில், அனைத்து தரப்பினரும் தங்களது ஓட்டுக்களை செலுத்த வழிவகை செய்யும் வகையில், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் தெற்கு ரயில்வே துறை, அகில இந்திய வானொலி, கடல்சார் துறை, விமான நிலைய ஆணையம், தொலை தொடர்பு, ஊடகவியலாளர்கள், சென்னை மெட்ரோ, போக்குவரத்து, மின் வாரிய பகிர்மான கழகம், தீயணைப்பு, சிறை மற்றும் போக்குவரத்து போலீசார் ஆகியோ தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம். மாவட்டத்தில் உள்ள, 9 சட்டசபை தொகுதிகளுக்கும், 750க்கும் மேற்பட்ட படிவம் 12, டி., பெறப்பட்டுள்ளது.
அதன்படி படிவம் பெற்ற, அத்தியாவசிய பணியாளர்களுக்கு வரும் 13ம், 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில்,
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஓட்டுப்போட ஏதுவாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்களில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை காண்பித்து, தபால் ஓட்டு மையத்தில் வாக்களிக்கலாம்.
தேர்தல் நாள் அன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் தங்கள் ஓட்டினை அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட மையத்தில், தபால் ஓட்டு மூலம் மட்டுமே செலுத்த இயலும். படிவம் சமர்ப்பித்த வாக்காளர்கள், தேர்தல் நாளன்று ஓட்டுச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்க இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?