3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு

1


சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 14,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் நேற்று (ஏப்ரல் 14), தங்கம் விலை கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,220 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,13,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனை யானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



நேற்று (ஏப்ரல் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 100 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (ஏப்ரல் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 14,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளி நிலவரம்



வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 275 ரூாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement