தாதா கோஷ்டியை சேர்ந்தவன் கைது

புதுடில்லி:பிரபல தாதா கபில் சங்வான் என்ற நந்து கோஷ்டியை சேர்ந்த, அந்த கோஷ்டியின் பண விவகாரங்களை கவனித்து வந்த ஆதித்யநாத் மிஸ்ரா, 24, என்பவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

டில்லியில் பல தாதா கோஷ்டிகள் செயல்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்த ஆப்பரேஷனில், தாதா கோஷ்டியை சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.

இந்நிலையில், போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த ஆதித்யநாத் மிஸ்ரா என்பவனை, துவாரகா அருகே போலீசார் கைது செய்தனர். அவன் தான், கபில் சங்வான் கோஷ்டியின் நிதி விவகாரங்களை கவனித்து வந்தவன் என கூறப்படுகிறது.
அந்த தாதா கோஷ்டி, மாநிலம் முழுவதும் நடத்தி வரும் சட்ட விரோத சூதாட்டங்களை ஒருங்கிணைத்து வந்தவன் மற்றும் அந்த கோஷ்டிக்கு ஆயுதங்களை வழங்கி வந்தவன் என போலீசார் கூறுகின்றனர். அவனிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement